இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
SJB தலைவருடனான சந்திப்பின் போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான், தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல்வாதியின் வேலைத்திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கினார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து திலகரத்ன டில்ஷான் SJB களுத்துறை மாவட்ட, பேருவளை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக இந்த வாரம் உறுதியளித்த SJB பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு திலகரத்ன டில்ஷான் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி மூலம் - https://l.facebook.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.