சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்ற 350 கைதிகள் நாளை செப்டெம்பர் 12ஆம் திகதி கொண்டாடப்படும் கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இந்த கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக திஸாநாயக்க தெரிவித்தார்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk