மாளிகைக்காடு செய்தியாளர்.
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து சம்மாந்துறை நகரில் பிரசார நடவடிக்கைகள் இன்று தேசிய காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், சம்மாந்துறைத்தொகுதி இளைஞர் அமைப்பாளருமான ஆகிப் அன்சாரின் நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைக்கான வட்டார அமைப்பாளர்களான எம்.எச்.எம்.அஸ்வர், ஏ.எல்.இப்ராலெப்பை, எம்.எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது சம்மாந்துறை சந்தை, நகர வர்த்தக நிலையங்களுக்குச்சென்ற முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதேவேளை, குறித்த நடவடிக்கை நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.