சம்மாந்துறை அன்சார்.
நடைபெற்று முடிந்த இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்று பெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவின் வெற்றியினை கொண்டாடும் நிகழ்வு சம்மாந்துறையில் இன்று இடம் பெற்றது.
மக்கள் விடுதலை முண்ணனி (தேசிய மக்கள் சக்தி) கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும், அக்கட்சியின் நீண்டகால போராளியுமான சட்டத்தரணி ரிஷாட் எம் புஹாரி தலைமையில் இந் நிகழ்வு இன்று மிக எளிமையாக இடம் பெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றிய அமைப்பாளர் சட்டத்தரணி ரிஷாட் எம் புஹாரி ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்காவின் வெற்றியின் பங்காளர்களாக இருந்த சம்மாந்துறை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படு்த்தினார்.