Ads Area

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் பள்ளிவாயல் செல்ல அனுமதி மறுப்பு - ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்.

 (எஸ்.அஷ்ரப்கான்)


நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில்  முஸ்லிம் பயிலுனர்களையும் உத்தியோகத்தர்களையும் தொழுகைக்கு பள்ளிவாயல் செல்லத்தடை விதித்தது மற்றும் பயிற்சி ஏனைய நடவடிக்கைகள் சீரான முறையில் இயங்கவில்லை எனக்கூறி மாவட்ட பிரதிப் பணிப்பாளரின் இந்த நடைமுறையினைக் கண்டித்து, பயிலுனர்கள் நேற்று (09) நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறிப்பிடும் போது,


கடந்த வியாழக்கிழமை 06.09.2024ம் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களாகிய எங்களை இங்கு தலைமை வகிக்கும் பிரதிப்பணிப்பாளர் ரீ.வினோதராஜா ஜும்ஆ தொழுகைக்கு மற்றும் எந்த தொழுகைக்கும் செல்ல அனுமதிக்க முடியாதெனக் காலைக்கூட்டத்தில் எங்களுக்கு அறிவித்து இங்கு கடமை புரியும் சகோதர தமிழினத்தைச்சேர்ந்த காவலாளியூடாக வெள்ளிகிழமையன்று (06.06.2024) ஜும்ஆத் தொழுகைக்காக சென்ற வேளை, பிரதான நுழைவாயிலை மூடி தொழுக்காகவ்செல்ல விடாமல் தடுத்ததன்காரணமாக முறுகல் நிலையேற்பட்டது.


இந்நிலையில், இங்கு கடமையாற்றும் முஹம்மட் நசீர் சேர் என்பவர் தலையிட்டு நுழைவாயிலைத் திறந்து எங்களை இறுதி நேரத்தில் தொழுகைக்குச் செல்ல அனுமதி பெற்றுத்தந்தார்.


இவ்வாறானதொரு நிர்வாகத்தின் கீழ் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நிந்தவூரில்  முஸ்லிம்களின் உரிமைகளில் கை வைத்து தடை விதிக்கின்ற இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை துடைத்தெறிந்து எமது உரிமைகள் பெற்றுத்தரப்பட வேண்டும். 


நாம் இதற்கு முன் பல இடங்களில் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். அங்கு ஜும்ஆத் நேரத்திற்கு தொழுகைக்கு செல்லாவிட்டால் சகல முஸ்லிம் மாணவர்களையும் தொழுகைகாக விரட்டி விடுவார்கள். அந்தளவிற்கு நல்ல மற்ற மதத்தை மதிக்கின்ற பண்பாடு ஏனைய இடங்களில் இருக்கின்ற நிலையில் இங்கு உரிமை மறுக்கப்படுகின்றது.


எனவே, நிந்தவூர் தொழுகைகுச்செல்ல வேண்டாமென்பது மன வேதனையைத் தருவதோடு, நிந்தவூரின் உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஊர் வாழ் மக்களாகிய அனைவரும் இவ்விடயத்தினைக் கவனத்தில்ர்டுத்து தீர்வினை பெற்றுத்தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதே வேளை, குறித்த இடத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இவ்விடயமாக உரியவர்களிடம் பேசித்தீர்வினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe