யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் 36 மில்லியன் ரூபா பெறுமதியான 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (30) கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய புலனாய்வுப் பிரிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இரகசியமான முறையில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சோதனை நடத்தப்பட்டபோது சந்தேக நபர்கள் போதைப் பொருட்களை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மூலம் - https://www.themorning.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.