தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய நாளை (20) அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. பாடசாலைகள் திங்கட்கிழமை (23) திறக்கப்படும்.
எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை வியாழக்கிழமை (19) பாடசாலை நேரத்தின் பின்னர் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்குமாறு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்கு தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒவ்வொரு பாடசாலைக்கும் தொடர்புடைய காலப்பகுதியில் மாத்திரம் வாக்கு எண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மூடப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk