Ads Area

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நேரடித் தலையீட்டிலேயே ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை இடம்பெறும்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணைப் பிரிவை நிறுவுவதற்கு NPP இடைக்கால அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


தி சண்டே மார்னிங் நாளிதழுக்கு பி.எம்.அமரசூரிய அளித்த பேட்டியில், 


“ஜனாதிபதி தலைமையிலான விசாரணைப் பிரிவை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதனை விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த காலங்களில் நாங்கள் இடம்பெற்ற சில வழக்குகள் மற்றும் சமீபத்தில் வந்த வழக்குகளை தொடர்பில் நாங்கள் விசாரிப்போம். தற்போதுள்ள ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை NPP அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe