பாறுக் ஷிஹான்.
வீடுகளுக்குச்சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி பாலியல் சேட்டைக்கு முகங்கொடுத்த சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
26.09.2024ம் திகதி குறித்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரத்திலுள்ள வீட்டில் இடம் பெற்றுள்ளதாகவும் குறித்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 60 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு நேற்று (29) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக்கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயதுச்சிறுமி தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த சிறுமியின் குதவழியூடாக தனது கைவிரலை பயன்படுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்திருப்பதாகவும், இதனால் இரத்தம் வெளியேறியுள்ளதாகவும் பொலிஸ் முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.