சவுதி அரேபிய குடிமகனை கொன்ற வழக்கில் இந்தியருக்கு அண்மையில் (29) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தியா கேரளா மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ரியாத்தில் வசித்து வந்த யூசுப் பின் அப்துல் அஜீஸ் என்ற குடிமகனை அடித்துக் கொன்ற பாலக்காட்டைச் சேர்ந்த அப்துல் காதர் அப்துர் ரஹ்மான்(வயது-63) என்பவரை ரியாத்தில் உள்ள சிறையில் அண்மையில் (29/08/24) வியாழக்கிழமை காலை தூக்கிலிடப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.
ரியாத்தில் உள்ள ராவ்டாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கொலை நடந்தது. இந்திய தூதரகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது தண்டனையை ரத்து செய்ய பல முயற்சிகள் எடுத்தனர் ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
இதேபோல் சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தபூக்கில் போதை மாத்திரைகளை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுதி குடிமகன் ஈத் பின் ரஷித் பின் முகமது அல் அமிரிக்கும் கடந்த வியாழக்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.