பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நவம்பர் மாத இறுதியில் தேர்தலை இலக்காகக் கொண்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் புதிய பாராளுமன்றம் கூடும் வரை புதிய அமைச்சரவை பதவியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க இன்று தனது அமைச்சரவையில் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகவும், இது அவரது நிர்வாகத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கையினைக் குறிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிடமடைந்த ஆசனத்தில் ஹரிணி அமரசூரிய மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோர் பாராளுமன்றத்தில் NPP பிரதிநிதிகளாக உள்ளனர்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி ஒரு முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக NPP பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.