எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ‘சமகி ஜன சந்தானய’ (SJB) பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு கட்சி கூட்டத்தில் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது,
கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச,
தனக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எந்தவிதமான கூட்டணி ஒத்துழைப்பும் இல்லை என்றும் கூட்டணி தொடர்பில் அண்மைக்காலமாக பரவி வரும் வதந்திகளையும் நிராகரித்துள்ளார்.
சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் கிரிஷ்தவர் உட்பட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் இருந்து தனக்குக் கிடைத்த ஆதரவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு இலங்கையின் முன்னேற்றத்திற்கான தனது அர்ப்பணிப்பு தொடரும் என்றும் கூறியுள்ளார்.
"நீங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம், பர்கர் அல்லது வேறு எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நீங்கள் எந்த அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டாலும் சரி, உங்கள் நம்பிக்கையை நான் உணர்ந்திருக்கிறேன், அவற்றை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்" என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
"என்னை நீங்கள் நம்பியதற்கு நன்றி, நான் உறுதியளிக்கிறேன், நான் உங்களுக்கான தகுதியான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக போராடுவதை நிறுத்த மாட்டேன்" என்றும் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.