ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை தற்போது எட்டியுள்ளார், பேஸ்புக்கில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைத் (Followers) தாண்டிய 6 வது இலங்கை அரசியல்வாதி என்ற பெருமை அவர் தற்போது பெற்றுள்ளார்.
இது அவரை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, மற்றும் கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சி எம்.பி நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைத் (Followers) பெற்றவர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1. 4 மில்லியன் பேஸ்புக் பின்தொடர்பவர்களைக் கொண்ட இலங்கை அரசியல்வாதியாக உள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ – 1.4 எம்
நாமல் ராஜபக்ஷ – 1.3 எம்
ரஞ்சன் ராமநாயக்க – 1.2 எம்
மைத்திரிபால சிறிசேன – 1.1 எம்
கோட்டாபய ராஜபக்ச – 1 எம்
அனுரகுமார திஸாநாயக்க – 1 எம்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.