Ads Area

யாசகம் பெற சவுதிற்கு வருகை தரும் பாகிஸ்தானியர்களைத் தடு‌க்க நடவடிக்கை எடுக்கும்படி சவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பலர் சவுதி அரேபியாவிற்குள் பிச்சை எடுக்க வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.


இதற்கிடையே, புனித யாத்திரை செல்வதாக அனுமதி வாங்கி அரபு நாட்டுக்குச் சென்று அங்கு பாகிஸ்தானியர்கள் பலர் பிச்சை எடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவ்வாறு புனித யாத்திரை பெயரைச் சொல்லி பிச்சை எடுக்க நுழையும் பாகிஸ்தானியர்களை பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.மேலும் பிச்சை எடுத்து பிடிபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அரபு-அமீரகத்திற்கான பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி தெரிவித்தார்.


இந்நிலையில், புனிதயாத்திரை விசாவின் கீழ் பாகிஸ்தானியர்கள் பிச்சை எடுக்க தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சவுதி ஹஜ் அமைச்சகம் பாகிஸ்தானின் மத விவகார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. புனித யாத்திரை என்ற போர்வையில் சவுதி அரேபியாவுக்கு தங்களுடைய நாட்டு மக்கள் செல்வதைத் தடுக்கும் வழிகளைக் கண்டறியுமாறும் பாகிஸ்தான் அரசிடம் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe