இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட அவரது வெற்றிடத்திற்கு லக்ஸ்மன் நிபுன ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினராக (எம்பி) நியமிக்கப்படுவார் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
லக்ஸ்மன் நிபுன ஆராச்சி, 2020 தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) விருப்பு வாக்குகளில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து வரிசையில் இருந்தவர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk