Ads Area

36 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற சகாவிற்கு வலயக்கல்விப் பணிமனையில் பிரியாவிடை நிகழ்வு.

( காரைதீவு சகா )


சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில் பிரிவுபசாரநிகழ்வு நேற்று  (27) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் நிருவாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்வை.யாசீர் அரபாத் முன்னிலையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


பிரதம அதிதியாக ஓய்வு பெறும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார். அவருடன் அவரது மைத்துனர் ஓய்வு நிலை அதிபர் கே.புண்ணியநேசன் புத்திரி எஸ்.டிவானுஜா ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.


நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி  நிலோபரா, எச்.நைரூஸ்கான், ஏ.எல்.நாசீர்அலி, . ஏஎம்.சியாட் ,கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.மகுமூத்லெவ்வை ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் எஸ்.சிவேந்திரன், நிருவாக உத்தியோகத்தர் உசைமா பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி கௌரி அருள்கடாட்சம் உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.


சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்களின் நலன்புரி ஒன்றிய உபதலைவரும் உதவிக்  பணிப்பாளருமான விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். மேலும் வளவாளர் ஏ.எல்.முனாப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


ஓய்வுபெறும் பணிப்பாளர் சகா தொடர்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான அரபாத், நைரூஸ்கான், நாசிர்அலி,உதவிக்கல்விப்பணிப்பாளர்ளான ஏ.நசீர், எம் எம் எம். ஜௌபர்  ஆகியோர் உரையாற்றினர்.


ஓய்வு நிலை தமிழ் ஆசிரிய ஆலோசகர் இசட் எம். மன்சூர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் றிஸ்வி ஆகியோர் கவிதையாற்றி வாசித்தனர். 10வருட காலம் ஆசிரியர் பணியும் 26, வருட காலம் உதவிக் கல்விப் பணிப்பாளர் பணியையும் நிறைவு செய்து 2024.09.27ம் திகதி ஓய்வு பெறும்  சகா  பல்துறை வித்தகர் ஆவார்.


ஏற்புரை நிகழ்த்துகையில் தான் 36வருடங்களுக்குமேல் கல்விச்சேவையாற்றி யதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாருடனும் முரண்படவில்லை.மாறாக அனைவரும் ஒத்துழைப்பு நல்கியதாக நன்றி கூறினார்.


நன்றியுரையை விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் ரிஎல். றைஸ்டீன் நிகழ்த்தினார்.ஆசிரிய ஆலோசகர் எஸ் எல்.நிஷார் தொகுத்தளித்தார்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe