ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி பணிப்புரைக்கு அமைய முன்னாள் அமைச்சர்களுக்கு பயன்படுத்திய உத்தியோகபூர்வ குடியிருப்புகளைத் திரும்பப் பெறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிக்காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகளை ஒப்படைக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் எம்.பி.க்கள் மாதிவெல குடியிருப்பைப் பயன்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய கொழும்பில் உள்ள அரசாங்க வீடுகளின் எண்ணிக்கை 50 ஆகும் எனவும குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மெய் பாதுகாவல்கள் தவிர, இதர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த மெய்பாதுகாவலர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.