ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் மீண்டும் சேர்க்க மாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. நெலும் மாவத்தையில் இடம் பெற்ற கட்சிக் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ளவது தொடர்பில் இடம் பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறான முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்களா என்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கட்சி முடிவு செய்தது. முன்னதாக கட்சியில் இருந்து விலகியவர்களில் பலர் மீண்டும் இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.