ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பங்களாதேஷ் உள்நாட்டு பிரச்சனை நடந்த நேரத்தில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக பொது இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தண்டனை மனிதாபிமான அடிப்படையில் அண்மையில் (03/09/24) ரத்து செய்யப்பட்டது.
மேலும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனையை தவிர்த்து அவர்களை நாடு கடத்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 54 பேருக்கு நாடு கடத்தவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடதக்கது.
குவைத் உள்ளிட்ட எந்தவொரு வளைகுடா நாட்டிலும் குடிமக்களை தவிர வெளிநாட்டினர் யாரும் போராட்டத்தில் ஈடுபட கூடாது என்பது கடுமையாக்கப்பட்ட சட்டமாகும்.