சவுதி அரேபியாவின் தம்மாமில் தனியாக உள்ள 5-வயது சிறுமி ஆராதியா அடுத்த வாரம் இந்தியா திரும்புவார். தந்தை, தாய் இறந்த நிலையில் கேரளா சமூக சேவை அமைப்பான "லோகா கேரளா சபா" உறுப்பினரும், சமூக ஆர்வலருமான நாஸ் வக்கம் குழந்தையை பாதுகாத்து வருகின்ற நிலையில். தாய் தந்தையின் உடலை தாயகம் அனுப்ப தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். மேலும் தான் இனிமேல் தனியாகத்தான் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளாத சிறுமி, தன்னைப் பார்க்க வரும் அனைவரிடமும் தனக்கு தெரிந்த கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் காட்சி அங்குள்ள இந்தியர்கள் அனைவரின் கண்களையும் குளமாக்கும் (கண்ணீர்) நிகழ்வாக உள்ளது.
கேரளா மாநிலம் திருக்கருவை பகுதியை சேர்ந்த அனூப் மோகன்(வயது-37), அவரது மனைவி ரம்யா(வயது-30) ஆகியோர் கடந்த புதன்கிழமை மாலையில் அல்கோபார் அருகே துக்பாவில் உள்ள அவர்களது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டனர். மனைவியைக் கொன்றுவிட்டு அனூப் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது முதற்கட்ட போலீஸ் விசாரனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த துயரமான முடிவுக்காக காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பத்திற்கும் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்பட்டு உள்ளது. மரணம் குறித்து ஆராதியா கொடுத்த விபரங்கள் மட்டுமே போலீசார் கைவசம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தால்தான் துல்லியம் தெரியவரும்.
இவருடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆவணங்கள் சரியாக இருந்தாலும், இட நெருக்கடி காரணமாக உடல்கள் தம்மாம் மருத்துவ வளாக பிணவறையில் இருந்து கத்வீஃப் மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டதால் பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை. வரும் நாட்களில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என சமூக ஆர்வலர் நாஸ் தெரிவித்தார்.