சவுதி அரேபியாவில் மது மற்றும் போதை வழக்குகளில் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் 15 பேருக்கு கடந்த 3 மாதங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்குகளில் மரண தண்டனை உறுதியாக வழங்கப்படுகிறது. மது வழக்குகளில் வழக்கின் தீவிரத்தைப் பொறுத்து மரண தண்டனை வழங்கப்படுகிறது.
தண்டனை வழங்கப்பட்டவர்களில் 2 பேர் சவுதி நாட்டினர். 6 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் எகிப்து மற்றும் சிரியாவைச் சார்ந்தவர்கள் ஆவர்.
இந்தியாவைச் சார்ந்தவர்கள் பலரும் இதே வழக்குகளில் சவுதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.