அரசியல் ஆதாயங்களுக்காக மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகளை அம்பலப்படுத்துவதில் புதிய அரசாங்கம் தாமதம் செய்வது குறித்து எதிர்க்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சமீபத்தில் வழங்கப்பட்ட அனைத்து "உரிமங்களை" இடைநிறுத்துவதாகவும், உரிமம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவதாகவும், அவ்வாறு பரிந்துரைத்த அந்தந்த அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவதாகவும் அவர் கூறினார்கள்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பெயர் பட்டியலை வெளியிடுவதிலிருந்தும், இந்த ஒழுக்கக்கேடான மதுக்கடைகள்/பார்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கும் ஏன் தாமதிக்கிறது என மனோ கணேசன் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மேலும் கேள்வி எழுப்பினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.