முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவாலுக்குச் சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை மூன்று மாதங்களுக்கு முடக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இரண்டு வங்கிக் கணக்குகள் மூன்று மாத காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 53(1) பிரிவின் பிரகாரம் இலஞ்ச ஆணைக்குழுவினால் இந்த முடக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.