அமெரிக்காவின் Gallup's Global நிறுவனம் சார்பாக திரட்டப்பட்ட தகவல்களின் படி 2023 ஆம் ஆண்டில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 140 நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களில் இருந்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் 92 சதவிகிதம் மக்கள், தாங்கள் மிகவும் பாதுகாப்பாக கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
99 சதவிகிதம் மக்கள் பாதுகாப்பானதாக உணருவதாக கருத்து தெரிவித்து குவைத் முதலிடத்தையும், 94 புள்ளிகளுடன் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும், 92 புள்ளிகள் பெற்று தஜிகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.