சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் மனநலப் பிரிவு ,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட 2024ம் ஆண்டுக்கான உலக மனநல தினம் இன்று(10) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன்,உட்பட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் உட்பட உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
"பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது" எனும் தொனிப்பொருளினை மையப்படுத்தி இவ் ஆண்டின் உலக மனநல தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இது பணியிட நல்வாழ்வின் இன்றியமையாத அம்சமாக மனநலம் வளர்ந்து வரும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது. பணியிடங்கள் மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் பணியாளர்களுக்கு மிகவும் ஆதரவான சூழலை உருவாக்குவது போன்ற விவாதங்களை வளர்ப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த நிகழ்வில் விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் நடைபவனி என்பனவும் இடம்பெற்றது.