Ads Area

கெஹலிய ரம்புக்வெல்ல என பெயர் சூட்டப்பட்டிருந்த பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்ற உத்தரவு பிறப்பிப்பு.

கொழும்பு, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள 'கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை' என உடனடியாக பெயர் மாற்றம் செய்வதற்கு அபயகோன் நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளார்.


கண்டியில் உள்ள பாடசாலைகளில் ஊழல் அரசியல்வாதிகளின் பெயர்களை நீக்குமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து மாகாண கல்வி திணைக்களத்தின் கட்டமைப்பு குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.


இப்பாடசாலை இனி குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை என அழைக்கப்படும்.


இதேவேளை, மினிபே கல்வி வலயமான தெல்தெனிய பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் பெயரை மாற்றவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.


முன்னதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வி அமைச்சின் 1996 ஆம் ஆண்டு சுற்றறிக்கையில் உயிருடன் இருக்கும் நபர்களின் பெயரை பள்ளிகளுக்கு வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் கொள்முதல் ஊழலில் கெஹலிய ரம்புக்வெல்ல ஈடுபட்டிருந்த போதிலும், அவரது பெயரை பாடசாலைக்கு வைத்திருப்பது பொருத்தமற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.


செய்தி மூலம் - https://www.dailymirror.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe