அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், சம்மாந்துறை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் ரனூஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் ஐ.எல்.எம். மாஹிர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்ட செயலாளர் காதர் சேர், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், வேட்பாளர்கள், இளைஞர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
- ஊடக பிரிவு -