சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக சவூதி அரேபிய தூதுவர் காலிட் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்தார்.
சவூதி அரேபிய தூதுவர் அல்கஹ்தானி சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸின் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, தேயிலை ஏற்றுமதியை மேம்படுத்தவும், சவுதி முதலீடுகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
செய்தி மூலம் - https://www.themorning.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.