சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பிலான பயிற்சி பட்டறையை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம் நிப்ராஸ் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இரண்டு நாட்கள் முழு நேர பயிற்சிப் பட்டறையை முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இப் பயிற்சிப் பட்டறையானது மனிதவள, வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் சம்மாந்துறைப் பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுசரனையில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.