தில்ஷத் பர்வீஸ்.
சம்மாந்துறை ஊடக மையத்தை இன்று (16) முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சம்மாந்துறை கலாச்சார மண்டபத்தில் சந்தித்தார்.
இந்நிகழ்வில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு தேர்தல் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு விஷேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை ஊடக மையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் காமில் இம்டாட் உட்பட DYRF மற்றும் VIEW நிறுவனத்தின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.