எதிர்கட்சியின் மூத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (வயது 76) தனது 36 ஆண்டுகால பாராளுமன்ற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரியெல்ல, பல தசாப்தகால அரசியல் சேவையின் பின்னர் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவரது மகள் கண்டி மாவட்டத்தில் சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் கீழ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையா என வினவிய போது, இது தொடர்பில் நாளை வெளிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.