Ads Area

ஒன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் 20 சீனப் பிரஜைகள் அதிரடிக் கைது.

ஒன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் இருபது (20) சீன பிரஜைகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்களிடம் இருந்து 5 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், 332 USB கேபிள்கள், 17 ரவுட்டர்கள் மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


இலங்கையில் ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளுடன் இந்தக் குழுவுக்கு தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


கடந்த ஞாயிற்றுக்கிழமை, 30 சீன பிரஜைகள், 04 இந்திய பிரஜைகள் மற்றும் 06 தாய்லாந்து பிரஜைகள் உட்பட நாற்பது (40) வெளிநாட்டு பிரஜைகள் ஹன்வெல்லவில் இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.


அதன் பின்னர், இந்த வாரம் திங்கட்கிழமை மேலும் பத்தொன்பது (19) சீன பிரஜைகள் நாவலில் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர்.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe