"பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" மற்றும் Ageing with Dignity எனும் தொனிப்பொருள்களினை மையப்படுத்தி 2024ம் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வு மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பிரதான நிகழ்வாக நேற்று (01) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபயேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB), சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஓ.கே.எப் சரீபா, சமூக சேவை உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உதவி,வலய முகாமையாளர்கள்,பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கள உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சிறுவர் கழகங்களின் உறுப்பினர்கள், முதியோர் அமைப்புகளின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள், சிப்தொர புலமைப்பரிசில் நிகழ்வுகள் என பல நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ் நிகழ்வானது சமூக சேவை பிரிவு மற்றும் சமூர்த்தி பிரிவினர்களால் இணைந்து நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.