முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (20) தமது உத்தியோகபூர்வ இல்லங்களைத் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் கூற்றுப்படி, உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒதுக்கப்பட்ட 108 எம்.பி.க்களில் சுமார் 30 பேர் மாத்திரமே இதுவரையில் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளனர்.
108 உத்தியோகபூர்வ இல்லங்களில் ஏறத்தாழ 70 வீடுகள் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவ் இல்லங்கள் இலங்கையின் முப்படையினரால் புனரமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
அதன்படி, இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் 10வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு டிசம்பர் 3ஆம் திகதி முதல் ஒதுக்கப்படும்.
செய்தி மூலம் - https://www.themorning.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.