சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்
தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இரவு வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பௌஸ் மாவத்தை ஊடாகச் செல்லும் வண்டு வாய்க்கால் பாலத்துக்கு அருகாமையில் காணப்படும் ஒரு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய பள்ளி வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இப்ரா லெப்பை முகம்மட் சித்திக் (வயது 37) என்பவரே மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று (04) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.