Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற சுனாமி ஞாபகார்த்த நிகழ்வுகள்.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு அண்மையில் (26) காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மெளன பிரார்த்தனை செலுத்துமாறு  அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது.


டிசம்பர் 26, 2004 அன்று நடந்த இப் பேரழிவில் இலங்கையில்  35,000 க்கும் அதிகமானவர்கள் இறக்க நேரிட்டது மற்றும் 5,000 க்கும் அதிகமானவர்கள் காணாமல் போனார்கள்.


மெளன அஞ்சலியும் பிரார்த்தனை  நிகழ்வும் பிரதேச செயலாளர் S.L. முஹம்மது ஹனீபா அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக  சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதான நிகழ்வாக இடம்பெற்றது.


மேலும் இன்றைய தினம் தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறவுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe