சர்வதேச பத்திரிகையான ராய்ட்டர்ஸ் செய்திப்படி போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கி்ல் இந்த ஆண்டு இதுவரையில் 150 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களில் சுமார் 100 பேர் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளை சேர்ந்தவர்கள். இதைத் தவிர சவுதி நாட்டுக்கு எதிராக செயல்பட்டது, தீவிரவாத செயல்கள், கொலை வழக்கு, கற்பழிப்பு உள்ளிட்ட பிற குற்றங்களுக்காக மீதியுள்ள நபர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தண்டனை நிறைவேற்றப்பட்ட நபர்களில் 61 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் சவுதி குடிமக்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடம் இதுவரையிலான மரணதண்டனையின் எண்ணிக்கை, மனித உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனமான Reprieve இன் மரணதண்டனை அறிவிப்புகளிலிருந்து தொகுக்கப்பட்டது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்தால் இந்த தகவல் சரிபார்க்கப்பட்டது. இதற்கிடையே மரணதண்டனை வழங்கப்படுவதில் மனிதஉரிமை மீறபடுவதாக சர்வதேச அளவிலான சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றதும் குறிப்பிடதக்கது. இதற்கு காரணம் பலரது மரணதண்டனை பற்றிய எந்த தகவலையும் பொது வெளியில் வெளியிடாமல் இரகசியம் காப்பதே என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
News From - Arab Tamil Daily.