குற்றத்தில் பணிப்பெண் அண்மையில் (26/12/24) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியான சம்பவம் தொடர்பாக போலீஸ் வெளியிட்டுள்ள செய்தியில் நாட்டின் சபா அல்-சலாம் பகுதியிலுள்ள ஒரு குடிமகனான ஒருவர் வீட்டில் வேலை செய்துவந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பணிப்பெண் ஒன்றரை வயது ஆண் கைக்குழந்தையை வாஷிங் மெஷினில் சுத்தம் செய்ய வேண்டிய பொருட்களுடன் சேர்த்து வைத்து உள்ளே போட்ட பிறகு மெஷினை ஆன் செய்த வழக்கில் பணிப்பெண்ணை கைது செய்தனர்.
மேலும் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு காணாத காரணத்தால் குடும்பத்தினர் தேடியபோது, வாஷிங் மெஷினில் குழந்தை கிடந்ததைக் கண்டதாகவும் மகனை பிரித்தெடுத்து ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது குழந்தை இறந்தது தெரிந்தது. அதன்படி, உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும்,தப்பியோடிய பணிப்பெண்ணை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
பணிப்பெண் வாக்குமூலம்:
இதற்கிடையே காவல்துறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக பணிப்பெண்ணிடம் நடத்திய கூடுதலான விசாரணையி்ல் சம்பவம் கொலை என தெரியவந்தது.
வீட்டின் உரிமையாளர் தன்னை துன்புறுத்தியதாகவும் இதற்கு பழிவாங்கும் வகையில் இந்த குற்றம் செய்ய தன்னை தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த கொடூரமான செய்தி அறிந்த குவைத் சமூகம் அதிர்ச்சியில் உள்ளது.
குவைத்துக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கடந்த காலங்களில் உள்நாட்டு தொழிலாளர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளை தொடர்ந்து மோசமாக இருந்தன. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் வீட்டுப்பணியாளர் கொலை வழக்கில் கைதாகியுள்ளது குவைத்தில் வேலை செய்கின்ற பிலிப்பைன்ஸ் சமூகத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.