மார்க்க கல்வியின் மேன்பாட்டிற்கு உதவுவது நவீன கல்வி முறையா? அல்லது புராதான கல்வி முறையா? எனும் தலைப்பில் விவாத அரங்கு சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் பிரமாண்டமான முறையில் கல்லூரியின் கேட்போர் மண்டபத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வுக்கு நடுவர்கலாக அஷ்-ஷெய்க். ஆஷிக் முப்தி (ஸஃத் அறபுக் கல்லூரி விரிவுரையாளர்) அஷ்-ஷெய்க். யு.எம். ஜபறுல்லாஹ் (தாறுல் ஈமான் உப அதிபர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவாதத்தில் எ ஆர் சகீப் (தரம் எட்டு)சிறப்பாக விவாதிட்டமைக்கு சிறப்ப்பு பரிசும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
விவாதத்தில் மார்க்க கல்வியின் மேன்பாட்டிற்கு உதவுவது நவீன கல்வி முறையே எனும் தலைப்பில் விவாதிட்ட குழுவினர்கள் வெற்றி பெற்றனர்.
மற்றும் இன் நிகழ்வில் நடந்து முடிந்த முஹர்ரம் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்பட்டன.