குவைத்தில் குடியுரிமை மீறல்களுக்கான புதிய அபராதங்களை ஜனவரி 5 முதல் அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விசிட் விசாவில் வந்த பிறகு அதிக காலம் தங்குவதற்கு நாளொன்றுக்கு 10 தினார் அபராதம் என்று கட்டணம் அதிகரிப்பு செய்வது உள்ளிட்ட மாற்றங்கள் நடைமுறையில் வருகின்றன.
தற்காலிக விசிட் விசா அனுமதி காலாவதியான வெளிநாட்டவர்களுக்கும், குடியிருப்பு விசா காலாவதியான பிறகும் நாட்டை விட்டு வெளியேற மறுத்த வெளிநாட்டவர்களுக்கும் புதிய முறை பொருந்தும். நாட்டில் விசா காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக தங்குகின்ற வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதமான 600 தினார்களிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பை புதிய நடைமுறையில் வருகின்றன. இந்த புதிய அபராதங்கள் ஜனவரி 5 முதல் அமலுக்கு வரும் வகையில் உள்துறை அமைச்சகம் தனது கணினி அமைப்பை புதுப்பித்துள்ளது.
திருத்தப்பட்ட அபராத தொகை அட்டவணைப்படி வசிப்பிட குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சமாக 1,200 தினார்களும், விசிட்டிங் விசாவில் வந்து விசா காலாவதி கடந்தும் சட்டவிரோதமாக தங்குகின்ற வெளிநாட்டினருக்கு அதிகபட்சமான 2,000 தினார்களும் அபராதம் விதிக்கப்படும்.