சம்மாந்துறைப் பிரதேசத்திட்குட்பட்ட நெல்லிக்காட்டு வட்டை, ஆலையடி வட்டை ஆகிய பிரதேசங்களில் சட்ட விரோத மண் அகழ்தல் சம்மந்தமாகவும், ஏனைய ஆறுகளில் மணல் அகழ்தல் சம்மந்தமாகவும் கலந்துரையாடல் (16) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த சட்ட விரோத மண் அகழ்தல் தொடர்பில் தற்போது காணப்படுகின்ற சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல் சம்மந்தமாகவும் சட்ட விரோத மண் அகழ்தலை கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மணல் அகழ்வது சம்மந்தமான முறையான பொறிமுறைகள் சம்மந்தமாகவும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவித் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB),பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,பிராந்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் ஆர்.வேல்கஜன்,அம்பாறை புவிச்சரிதவியல்,அளவை சுரங்கங்கள் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.ஆர்.எம்பாரீஸ், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே முஹம்மட், சம்மாந்துறை அனைத்து விவசாய சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம் நெளசாத்,சம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம் நெளபர், மல்வத்தை விவசாய போதனாசிரியர் எம்.டி,ஏ.கரீம்,காணி உத்தியோகத்தர் டி.கே.எம் ஜவாஹீர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் நளிர் உட்பட திணைக்களங்களின் பிரதிநிதிகள்,கிராம சேவை உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை மணல் அகழ்வோர் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.