Ads Area

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை !

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரினால் செவ்வாய்கிழமை (28.01.2025) மாலை முற்றுகையிடப்பட்டதில் 23 பரல்களில் 15 இலட்சம் மில்லிலீற்றர் கோடா 5,25,000 லீற்றர் கசிப்பு உள்ளிட்ட தோணி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் சுற்றிவளைத்தனர்.


இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 23 பரள்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லிட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லிட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த தோனியும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி தெலங்கா வலகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர.


சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரள்கள் போத்தல்கள் பலன்கள் என்பனவும் பொலிசாரினர் கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளனர். கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe