இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் சவுதி தூதரகம் இணைந்து நடாத்திய தேசிய ரீதியான அல்குர்ஆன் மனன போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் 2025.01.18 ஆம் திகதி காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது.
இப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக சுமார் 500ற்கும் அதிகமான மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டதோடு, கண்டி தஸ்கர ஹக்கானியா அரபுக் கல்லூரி சார்பாக கலந்துகொண்ட சாதிக் ஷயீதுல் பாஷ் என்ற மாணவன் அகில இலங்கைரீதியில் ஐந்து ஜுஸ்ஊ மனன பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று அக்கல்லூரிக்கும் , எமது சம்மாந்துறை மண்ணுக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார்.
இவர் மர்ஹூம் M.L.சாதிக் ஹாபிஸ் மௌலவி, A.K.சபீனா (ஹாபிழா மௌலவியா) ஆகியோரின் அன்பு புதல்வரும் ஆவார்.
இவரின் வெற்றிக்காக முயற்சித்த , துஆ செய்த அனைவருக்கும் குறிப்பாக கல்லூரியின் அதிபர் , உஸ்தாத்மார்கள், நிர்வாகிகள், பெற்றோர் அனைவருக்கும் கல்லூரி சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.