சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தில் 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 150 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்ற முகம்மட் றிஸ்விகான் பாத்திமா ஹனா என்ற மாணவியை பாராட்டும் நிகழ்வு அண்மையில் ஜமாலியா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் 114 புள்ளிகளைப் பெற்ற முகம்மட் றணீஸ் றஸ்லான் அஹமட், 107 புள்ளிகளைப் பெற்ற சித்தீக் பாத்திமா மிஹ்றாஜ் ஆகிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் A. முகம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி அதிபர் U.L. லாபிர், பிரதி அதிபர் M.H. ஜெஸீலா, வகுப்பாசிரியை A.B. பரீதா, வெட்டுப்புள்ளி களுக்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவியின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.