Ads Area

வெள்ள நீரில் மூழ்கிய சம்மாந்துறை பிரதேச விவசாய நிலங்கள்; விவசாயிகள் அங்கலாய்வு!

 சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.

 

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட நைனாகாடு சாவாற்றின் (பனையடிஇறக்கம்) உடைப்பெடுத்துள்ளமையினால் பல விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன.


இவற்றுள் சாவாறு ஆஸ்பத்திரி பாம் முழுமையாக பாதிக்கப்பட்டு காணப்படுகிறது. அதுமட்டுமின்றி வடசேலியா விவசாய நிலம் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் போது "கடந்த வெள்ள அனர்த்தத்தினால் சாவாறு பனையடி இறக்கம்  உடைந்த நிலையில் காணப்பட்டது. அதனை உரியமுறையில் சீரமைக்கப்படாமையினால் இன்று இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு முழு பொறுப்பும் உரிய அதிகாரிகளே அதுமட்டுமின்றி இவர்களுக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு..





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe