சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இடம்பெயர்ந்த மக்களை சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் தற்காலிகமாக தங்கியிருந்தனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மல்கம்பிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள 19 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் தற்காலிகமாக இரண்டு நாட்களாக சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்தனர். இன்று திங்கட்கிழமை (20) மாலை வேளையில் அவர்களின் வீடுகளில் காணப்பட்ட நீர் வற்றியமையினால் அவர்களை பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் அஸாறுடீன் சலீம் தெரிவித்துள்ளார்.