சம்மாந்துறை உடங்கா 02 ல் 12 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் அல்/ஹுதா பாலர் பாடசாலையின் 2024 ம் ஆண்டின் விடுகை விழா. கலை நிகழ்ச்சிகளுடன் 31/12/2024 ம் திகதி கமு/சது/ அல் அர்சத் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கமு/சது/ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபர் A.M.M. றிஸ்வான். அவர்களும், அதிதிகளாக. ச/ துறை வலயக்கல்வி உத்தியோகத்தர் Z.M. றிஸ்வி, கிராம அலுவலர். M.I. அஸீனா, கிராம பொருளாதார உத்தியோகத்தர் M.H. நிஹாறா, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் இர்பான், சமூக செயற்பாட்டாளர் முஹம்மட் றிஷ்விகான் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் அல்/ ஹுதா பாலர் பாடசாலையின் ஆசிரியைகளான இர்பானா மற்றும் முஸத்திகா ஆகியோராலும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளாலும் மாணவர்களுக்கு நினைவு சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் திரு. றிஷ்விகான் அவர்களினால் மாணவர்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.