பாறுக் ஷிஹான்.
கிளீன் ஶ்ரீ லங்கா (𝐂𝐥𝐞𝐚𝐧 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚)” தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து, சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் 𝟐𝟎𝟐𝟓ம் வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், காலை 8.30 மணிக்கு பிரதேச சபை செயலாளினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்காக இரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் ஒன்றுகூடிய பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெகுசன ஊடகங்கள் மூலமாகவும் ஒலி ஒளிபரப்பப்படும் "க்ளீன் ஸ்ரீ லங்கா" தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய விழாவுடன் இணைந்து புத்தாண்டில் நாட்டின் எதிர்கால சுபிட்சத்துக்காக ஒருங்கிணைந்து பணியாற்ற சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச சபையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கொண்டனர்.