Ads Area

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகளினால் சட்டத்தை மீறிய ஆறு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

 சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.

 

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் அவர்களின் தலைமையில் நேற்று (29) புதன்கிழமை திடீர் சோதனை நடைபெற்றது.


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகளினால் நேற்று (29) புதன் கிழமை மேற்கொள்ளப்பட்ட உணவு நிலையங்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, உணவுச் சட்டத்தை மீறிய இரண்டு பேக்கரிகள் உட்பட ஆறு உணவகங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அத்துடன், வட்டிலப்பம் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர் ஒருவருக்கு colour code (உப்பு, இனிப்பு, கொழுப்பு) இடாமல் விற்பனை செய்தமை தொடர்பாக இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (30) வியாழக்கிழமை குறித்த ஆறு உணவகங்களுக்கு மொத்தமாக ரூபா 65000/- தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


குறித்த சோதனை நடவடிக்கைக்காக, வாகன உதவி செய்த சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே. முகம்மட், பிரதேச சபை வாகன சாரதி அனைவருக்கும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe