சம்மாந்துறை உடங்கா 02 கிராம சக்தி மஹா சங்கத்தின் தலைவராக 01/07/2025ம் திகதி ஜனாப் M.I.M.றிஸ்விகான் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந் நிர்வாகத் தெரிவு நிகழ்வின் போது உடங்கா 02 பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முந்தைய நிர்வாகத் தெரிவு தொடர்பிலான விரிவான செய்தி - https://www.sammanthurai24.com/2025/01/sammanthurai_02114737453.html
தற்போது மீண்டும் உடங்கா 02 கிராம சக்தி மஹா சங்கத்திற்கான நிர்வாக தெரிவு 31/01/2025 ம் திகதி பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் இடம் பெற்றது.
இந் நிர்வாக தெரிவில் தலைவர் பதவிக்கான தெரிவு மாத்திரம் வாக்களிப்புக்கு விடப்பட்டது. அதிலும் ஜனாப் எம்.ஐ.எம். றிஸ்வி கான் அதிகப்படியான வாக்குகளால் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இந் நிர்வாகத் தெரிவுக்கு வருகை தந்த பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகளுக்கும் சங்கத்தின் அங்கத்துவர்களுக்கும் உடங்கா 02 பிரதேசத்தின் பொது மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.